Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கசௌலி » ஈர்க்கும் இடங்கள் » லாரென்ஸ் ஸ்கூல்

லாரென்ஸ் ஸ்கூல், கசௌலி

27

சர் ஹென்றி எம்.லாரென்ஸ் என்பவரால் 1847ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி துவங்கப்பட்ட இந்தப்பள்ளி நாட்டிலுள்ள மிகப்பழமையான பள்ளிக்கூடங்களில் ஒன்றாக திகழ்கிறது.

கசௌலிக்கு அருகில் 6 கி.மீ தூரத்தில் உள்ள சனவார் எனும் இடத்தில் இந்த பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் இந்தியாவின் பல பிரபலங்களும் முக்கியஸ்தர்களும் கல்வி கற்றுள்ளனர்.

139 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த பள்ளிக்கூடம் பெரிய விளையாட்டு மைதானங்கள், கட்டிடங்கள் மற்றும் விடுதிகளை கொண்டுள்ளது. இயற்கைச்சூழலின் நடுவே அமைந்துள்ள இந்த பள்ளி வளாகத்தை சுற்றிலும் செடார், ஓக் மற்றும் பைன் மரக்காடுகள் சூழ்ந்துள்ளன. இந்த பள்ளியின் உன்னதமான கல்விப்பங்களிப்பிற்காக கிங்க்ஸ் கலர் எனப்படும் மிகப்பெரிய கலாசாலை விருது ஆங்கிலேயெர் காலத்தில் வழங்கப்பட்டிருக்கிறது.

ஈடன் பள்ளி, தி டியூக் ஆஃப் யார்க் ராயல் மிலிட்டரி ஸ்கூல், ஷிரூஸ்பரி, செல்டன்ஹாம் மற்றும் சான்ட் ஹர்ஸ்ட் ராயல் மிலிட்டரி காலேஜ் போன்றவை மட்டுமே இந்த உயரிய விருதினை பெற்றுள்ள இதர கல்வி நிறுவனங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1857ம் ஆண்டு சர் ஹென்றியின் இறப்புக்குப்பின்னர் இந்தப்பள்ளியின் நிர்வாகத்தை அரசே ஏற்றுக்கொண்டது. இந்த பள்ளி வளாகத்தில் சாம்பல் கற்களால் கட்டப்பட்டுள்ள ஒரு கதீட்ரல் தேவாலயம் பயணிகளால் விரும்பி ரசிக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat