குப்த்காஷி எனும் இந்த சுற்றுலாத்தலம் இங்குள்ள புராதனமான விஷ்வநாதர் கோயில், மணிகார்ணிக் குண்ட் மற்றும் அர்தநாரீஷ்வர் கோயில் ஆகியவற்றுக்கு புகழ் பெற்றுள்ளது. அர்தநாரீஷ்வரர் கோயிலில் சிவபெருமான் தனது ஆண் பாதி – பெண் பாதியான அவதார கோலத்தில் காட்சி தருகிறார்.
புராணிகக்கதைகளின்படி சிவபெருமான் இந்த ஸ்தலத்தில் சிறிது காலம் மறைந்து வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. கேதார்நாத் பகுதியில் ஒரு காளையின் ரூபத்தில் சிவன் மறைந்து வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது.
அப்போது பாண்டவர்களை தவிர்ப்பதற்காக அவர் மண்ணுக்குள் புகுந்துகொண்டபோது திமிலானது இந்த ஸ்தலத்திலும், கால்கள் துங்க்நாத் என்ற இடத்திலும், முகம் ருத்ரநாத் என்ற இடத்திலும், வயிற்றுப்பகுதி மத்மஹேஷ்வர் எனும் இடத்திலும் காணப்பட்டன.
பின்னர் இந்த இடங்கள் யாவும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறின என்று ஐதீகக்கதைகள் கூறப்படுகின்றன. குப்த்காஷிக்கு அருகில் 2 கி.மீ தூரத்தில் காந்தி சரோவர் எனும் மற்றொரு சுற்றுலா அம்சமும், 8 கி.மீ தூரத்தில் வாசுகி தால் எனும் ஏரி ஸ்தலமும் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications