லக்நந்தா ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான இந்த மந்தாகினி ஆறு சரபரி பனிமலைகளில் உருவாகி ஓடி வருகிறது. இது சொன்பிரயாக் எனும் இடத்தில் வாசுகிகங்காவுடன் இணைந்தபின் ருத்ரபிரயாக் எனும் இடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் சங்கமிக்கிறது. இறுதியில் இந்த ஆறு தேவபிரயாக் எனும் இடத்தில் பாகீரதி ஆற்றுடன் கலந்து புனித கங்கை ஆற்றில் சேர்கிறது.
மந்தாகினி ஆற்றில் ‘கிளாஸ் 3’ வகையை சேர்ந்த சுழல் நீரோட்டப்பாதைகள் நிறைய உள்ளன. ‘கிளாஸ் 4 மற்றும் 5 ம் வகை நீரோட்டங்களும் குறைந்த எண்ணிக்கையில் இந்த ஆற்றில் காணப்படுகின்றன.
இவை கயாக்கிங் எனப்படும் மிதவைப்படகு சாகச சவாரிக்கு ஏற்றவையாக உள்ளன. கேதார்நாத் கோயிலுக்கு அருகில் இந்த ஆற்றின் மீது ஒரு சிறிய பாலம் ஒன்றும் கட்டப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications