பிரபலமான மற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் சிஸ்சு, ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள கீலாங்கில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3100 மீட்டர் உயரத்திலுள்ள சிஸ்சு, சந்திரா நதிக்கரையோரம் அமைந்துள்ளது.
மேலும் சிஸ்சுவில் சாலையின் இருபக்கங்களிலும் அடர்ந்த குருஞ்செடிகளும், நெட்டிலிங்க மரங்களும் வளர்ந்துள்ளன. அவை மிகவும் அடர்த்தியாக உள்ளதால் சூரிய ஒளி ஊடுருவ முடியாது.
தாவர வகைகளில் உருளைக்கிழங்கு,பட்டாணி, மரகோதுமை மற்றும் பார்லியுடன் சேர்த்து காட்டு ரோஜாக்களில் வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களையும் இங்கு காணலாம். கைப்ஹங்க் சிகரம் (gyephang peak) இந்த கிராமத்தின் பின்னால் அமைந்துள்ளது.
லாஹால் (lahaul ) சிலையின் கடவுளாக கருதப்படும் கைப்ஹங்க் கடவுளின் பெயரை சிகரத்துக்கு வைத்துள்ளனர். கிராமத்திலிருந்து சிறிது தொலைவிலுள்ள கைப்ஹங்க் (gyephang ) சிகரத்திலுள்ள பனிப்பாறையிலிருந்து சிஸ்சு கால்வாய் ஓடுகிறது.
11 அல்லது 12 கி.பி-க்கு முந்தைய காலத்திலுள்ள இரண்டு பழமையான நீரூற்று அடுக்குகள் இவ்விடத்தின் மற்றுமொரு புகழ்பெற்ற அம்சமாக உள்ளது. மேலும் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக பொதுப்பணித்துறை ஒய்வு விடுதி ஒன்றும் அங்குள்ளது.



Click it and Unblock the Notifications