கேதாவிலுள்ள டாகோர் என்ற இடத்தில் உள்ள இந்த கோயில் கோமதி ஏரிக்கரையில் அழகே உருவாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. கோட்டை சுவருக்கு அருகில் இருக்கும் இந்த கோவிலில் எட்டு குவிமாடங்களை காணலாம்.
அதில் மைய்யப் பகுதியில் இருக்கும் குவி மாடம் 27 மீ. உயரத்தை கொண்டது. மேலும் இந்த மாநகராட்சியிலேயே உயரமான கோவிலாக விளங்குகிறது ராஞ்சோட்ரை கோவில்.
இந்த கோவிலில் தங்கத்தில் செய்யப்பட கோபுர கலசமும் வெண்ணிற பட்டு கொடியையும் காணலாம். கோவிலில் உள்ள மைய அறையில் கிருஷ்ணா பரமாத்மாவின் வாழ்க்கை குறிப்புகள் ஓவியமாக தீட்டப்பட்டிருக்கும்.
கருங்கற்களால் செய்து தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணத்தால் அலங்கரிக்கப்பட்டு பட்டு வண்ண உடையணிந்து கருவறையில் உள்ள சிலை மிகவும் ஈர்க்கும் வகையில் இருக்கும்.
கருவறை சிலையின் விலையுயர்ந்த மரத்திலான பீடம் பரோடாவை சேர்ந்த கேக்வாட்டால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. இந்த கோவில் 1772 ஆம் ஆண்டு கோபால் ஜெகநாத் அம்பேத்கரால் கட்டப்பட்டது.
இந்த கோவில் பொதுமக்கள் பார்வைக்காக தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், சாயங்காலம் 4 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும்.



Click it and Unblock the Notifications