Search
  • Follow NativePlanet
Share

கிஷன்கர் - சலவைக்கல் நகரம்

9

கிஷன்கர் நகரம் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் ஆங்கிலேய ஆட்சியின் போது ஜோத்பூர் அரசின் தலைநகரமாக விளங்கியது. அப்போது ஜோத்பூர் அரசின் இளவரசராக இருந்த கிஷன் சிங் அவர்களின் நினைவாகத்தான் இந்த நகரம் கிஷங்கர் என்று அழைக்கப்படுகிறது.

கிஷன்நகர் நகரம் 1840 முதல் 1879-ஆம் ஆண்டு வரை ப்ரித்வி சிங் மகாராஜாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் பிறகு அவருடைய மகன் சர்துல் சிங் மகாராஜா சிறந்த முறையில் கிஷன்நகர் நகரை ஆண்டு வந்தார்.

இந்த நகரில் தற்போது கூட ப்ரித்வி சிங் மகாராஜாவின் சந்ததியை சேர்ந்த ப்ரிராஜ் சிங்ஜி மகாராஜா வாழ்ந்து வருகிறார். இங்கு உள்ள பிரபலமான சுற்றுலா ஸ்தலங்களாக ஃபூல் மஹால் அரண்மனை, ரூபன்கர் கோட்டை, கிஷன்கர் கோட்டை போன்றவை அறியப்படுகின்றன.

கிஷன்கர் நகரின் புகழுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக திகழ்வது கிஷன்கர் பாணி ஓவியங்களாகும். அதுவும் 'பனி தனி' எனும் தாசி குலத்தை சேர்ந்த பெண்ணின் அங்க லாவண்யங்கள் கிஷன்கர் ஓவியங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பாங்கு கலா ரசிகர்களின் கண்களை ஒரு நொடி கூட இமைக்க அனுமதிக்காது.

இந்த வகை ஓவியங்களில் பச்சை வண்ணங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதுடன், பெரும்பாலும் இயற்கை காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

மேலும் கிஷன்கர் நகரம் இன்று சலவைக்கல் நகரம் என்ற அடைமொழியில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. அதோடு உலகிலேயே நவ கிரகங்களுக்கும் தனித்தனி சன்னதியுடன் ஒரு கோயில் கிஷன்கர் நகரில்தான் கட்டப்பட்டுள்ளது.

கிஷன்கர் நகரிலிருந்து ஜெய்ப்பூரின் சங்கனேர் விமான நிலையம் 135 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அதோடு கிஷன் நகருக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாக 27 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் அஜ்மீர் ரயில் நிலையமே அறியப்படுகிறது.

மேலும் ஆக்ரா, பிக்கனேர், ஜோத்பூர், ஜெய்சல்மேர், பரத்பூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கிஷன்கர் நகருக்கு இயக்கப்படுகின்றன.

கிஷன்கர் நகரில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கங்காவ்ர் எனும் திருவிழா மிகவும் ஆடம்பரமாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடப்படும்.

இதுதவிர கிஷன்கர் நகரில் கொண்டாடப்படும் உற்சாகமிக்க திருவிழாக்களாக ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகள் அறியப்படுகின்றன. இந்த நகரத்துக்கு சுற்றுலா வருவதற்கு அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்கள் பொருத்தமானதாக இருக்கும்.

கிஷன்கர் சிறப்பு

கிஷன்கர் வானிலை

சிறந்த காலநிலை கிஷன்கர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கிஷன்கர்

  • சாலை வழியாக
    ஆக்ரா, பிக்கனேர், ஜோத்பூர், ஜெய்சல்மேர், பரத்பூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கிஷன்கர் நகருக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கிஷன் நகருக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாக 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் அஜ்மீர் ரயில் நிலையமே அறியப்படுகிறது. இந்த ரயில் நிலையத்துக்கு நாட்டின் அனைத்து நகரங்களிலிருந்தும் ரயில் சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கிஷன்கர் நகரிலிருந்து ஜெய்ப்பூரின் சங்கனேர் விமான நிலையம் 135 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையதிலிருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கும், மும்பை சத்ரபதி விமான நிலையத்துக்கும் தினமும் எண்ணற்ற விமாங்கள் இயக்கப்படுகின்றன. எனவே ஜெய்ப்பூர் விமான நிலையத்தை அடைந்த பிறகு பயணிகள் வாடகை கார்கள் மூலம் எந்த சிரமமுமின்றி கிஷங்கர் நகரை வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
26 Apr,Sun
Return On
27 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
26 Apr,Sun
Check Out
27 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
26 Apr,Sun
Return On
27 Apr,Mon