பொல்கட்டி அரண்மனை கொச்சிக்கு அருகிலுள்ள பொல்கட்டி தீவில் அமைந்துள்ளது. 1744ம் ஆண்டில் டச்சுக்காரர்களால் இது கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனை ஒரு பாரம்பரிய மாளிகை போன்று தோற்றமளிக்கிறது. பசுமையான தோட்டங்களும் புல்வெளிகளும் பின்னாளில் இந்த மாளிகையை சுற்றிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
துவக்கத்தில் இது மலபார் டச்சு கமாண்டரின் இருப்பிடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் 1909ம் ஆண்டில் டச்சு வணிகர்கள் இம்மாளிகையை ஆங்கிலேயருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர்.
அதிலிருந்து பல ஆங்கிலேய கவர்னர்கள் இந்த மாளிகையிலிருந்து அழகான தோட்டங்களையும் அரபிக்கடலின் அழகையும் ரசிக்கும் சொகுசு வாழ்க்கையை இந்த மாளிகையில் அனுபவித்துள்ளனர்.
இந்தியா சுதந்திரமடைந்தபிறகு இது அரசு உடமையாக்கப்பட்டது. தற்சமயம் இந்த அரண்மனையில் ஒரு பாரம்பரிய சொகுசு ஹோட்டலும், ‘ரிசார்ட் தங்கும் விடுதி’யும் செயல்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த அரண்மனை பகுதிக்கு விஜயம் செய்து இயற்கை எழிலை ரசித்து மகிழ்கின்றனர். ஒரு ஆயுர்வேதிக் மசாஜ் மையம், கோல்ஃப் மைதானம் மற்றும் நீச்சல் குளம் ஆகியவை இங்கு அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications