எர்ணாகுளத்தப்பன் கோயில் என்றழைக்கப்படுகிற இந்த சிவன் கோயில் கொச்சி நகரத்திலுள்ள முக்கியமான ஆன்மீக திருத்தலமாகும். மேற்கு நோக்கியுள்ள மூலவரைக் கொண்டுள்ள இக்கோயில் கேரள பாணி கோயில் கலைக்கான உதாரணமாக திகழ்கிறது.
சாஸ்தா மற்றும் கணபதிக்கடவுள் சிலைகளும் இங்கு காணப்படுகின்றன. எர்ணாகுளத்தப்பன் உத்சவம் எனும் பிரம்மாண்டமான திருவிழா இக்கோயிலில் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் இந்த திருவிழா நடைபெறுகிறது.
பலவிதமான சடங்குகளும், ஆபரண அலங்காரங்களுடன் கூடிய யானைகளின் ஊர்வலமும் இத்திருவிழாவின்போது நடத்தப்படுகின்றன. கொடியேத்தம் எனும் நாளின்போது இத்திருவிழா துவக்கி வைக்கப்படுகிறது.
அதிலிருந்து எட்டு நாட்களுக்கு தொடர்ந்து பூஜைகள் மற்றும் சடங்குகள் என்று விமரிசையாக இத்திருவிழா அனுஷ்டிக்கப்படுகிறது. புலியணூர் மற்றும் சென்னோஸ் மானா என்ற இடங்களிலிருந்து வரும் பிராம்மண அர்ச்சகர்கள் இந்த திருவிழாவின் இறுதி நாள் சடங்குகளை நடத்தி முடிக்கும் உரிமையை பெற்றுள்ளனர்.
கேரள கோயில் திருவிழாக்களின் பாரம்பரிய அம்சங்களை இந்த திருவிழாவில் பங்கேற்பதன் மூலம் சுற்றுலாப்பயணிகள் அறிந்துகொள்ளலாம். கொச்சி நகரத்தின் மையத்திலேயே அமைந்திருப்பதால் சுலபமாக இக்கோயிலுக்கு விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications