கொச்சி பீச் அல்லது ‘கொச்சி கோட்டை கடற்கரை’ என்று அழைக்கப்படும் இந்த மணற்பாங்கான கடற்கரைவெளி பொழுதுபோக்குக்கு மிகவும் ஏற்ற இடமாக பிரசித்தி பெற்றுள்ளது. கொச்சி நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலுள்ள இப்பகுதியை எளிதில் சென்றடையலாம்.
இங்கு காணப்படும் அமைதியான சூழல் பயணிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தை அளிக்கிறது. இந்த கடற்கரைப் பகுதியிலேயே உள்ள கோட்டையும் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றுள்ளது.
காலனிய காலத்தைச் சேர்ந்த அழகம்சங்களுடன் காட்சியளிக்கும் இம்மாளிகை இந்தோ-ஐரோப்பிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த கடற்கரையை சுற்றிலும் ஆரம்ப கால ஐரோப்பிய குடியிருப்புகள் அமைந்துள்ளன.
இன்றும் இந்த குடியிருப்புப்பகுதிகள் தங்கள் பாரம்பரிய அம்சங்களுடன் மிளிர்வது சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பி ரசிக்கப்படுகிறது. இந்த கடற்கரையில் வருடா வருடம் ‘கொச்சி கடற்கரைத்திருவிழா’ எனும் கொண்டாட்டமும் நடத்தப்படுகிறது.
டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் நடத்தப்படும் இத்திருவிழாவில் ஏராளமான பயணிகளும் உள்ளூர் மக்களும் பங்கேற்று மகிழ்கின்றனர். விடுமுறையை கழிக்கவும், நீர் விளையாட்டுகளில் ஈடுபடவும் இந்த கடற்கரைப்பகுதிக்கு மாலை நேரத்தில் விஜயம் செய்வது சிறந்தது.



Click it and Unblock the Notifications