Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொச்சி » ஈர்க்கும் இடங்கள் » மியூசியம் ஆஃப் கேரளா ஹிஸ்டரி

மியூசியம் ஆஃப் கேரளா ஹிஸ்டரி, கொச்சி

88

மியூசியம் ஆஃப் கேரளா ஹிஸ்டரி என்றழைக்கப்படும் கேரள வரலாற்று அருங்காட்சியகம் மாதவன் நாயர் ஃபௌண்டேஷன் என்றும் அறியப்படுகிறது. இது கேரளப்பிரதேசத்தின் செழுமையான பாரம்பரியம் மற்றும் வரலாற்று உண்மைகளை காட்சிக்கு கொண்டுள்ளது.

கொச்சி நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் இந்த மியூசியம் அமைந்துள்ளது. ‘கடவுளின் சொந்த தேசம்’ என்று வர்ணிக்கப்படுகிற கேரள பூமியின் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள இந்த மியூசியத்துக்கு விஜயம் செய்வது அவசியம். இந்த மியூசியத்தின் வாயில் பகுதியில், விஷ்ணுக்கடவுளின் ஆறாவது அவதாரமான பரசுராமர் சிலை காணப்படுகிறது.

புராணக்கதைகளின்படி பரசுராமர் தன் ஆயுதமான கோடரியை அரபிக்கடலில் வீசி எறிந்தபோது உருவான நிலப்பகுதியே கேரளம் என்பதாக ஐதீகம் நிலவுகிறது. கேரள மாநிலம் தோன்றியதிலிருந்து இந்நாள் வரையிலான வளர்ச்சி யாவுமே இந்த மியூசியத்தின் நான்கு சுவர்களுக்குள் பொதிக்கப்பட்டிருப்பது ஒரு விசேஷமாகும்.

2000 வருட கேரள ராஜ்ஜியத்தின் வரலாறு, பாரம்பரியம் போன்றவை பிரமிக்க வைக்கும் ஒலி, ஒளி காட்சி அமைப்புகள் மூலம் பார்வையாளர்கள் முன் காட்சிப்படுத்தப்படுகிறது. குழந்தை முதல் வரலாற்று ஆய்வாளர்கள் வரை அனைவருமே மறக்க முடியாத அனுபவத்தை இந்த ஒரு மணி நேர காட்சித்திரையிடல் அளிக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Jul,Thu
Return On
24 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
23 Jul,Thu
Check Out
24 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
23 Jul,Thu
Return On
24 Jul,Fri