Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொல்லம் » ஈர்க்கும் இடங்கள் » தங்கசேரி பீச்

தங்கசேரி பீச், கொல்லம்

43

கொல்லம் நகரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள தங்கசேரி பீச் எனும் கடற்கரைப்பகுதி ஒரு அற்புதமான பிக்னிக் ஸ்தலமாகும். மணற்பாங்கான இந்த கடற்கரைப்பகுதியில் புராதனமான போர்த்துகீசிய கோட்டையின் சிதிலங்கள் காணப்படுவதால் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் அறியப்படுகிறது.

இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் இக்கடற்கரைப்பகுதிக்கு பயணிகள் ஓய்வெடுக்கவும் உற்சாகப்படுத்திக்கொள்ளவும் ஏராளமாக வருகை தருகின்றனர்.

இந்த கடற்கரையின் முக்கியமான கவர்ச்சி அம்சம் இங்கு அமைந்திருக்கும் ஒரு பழமையான கலங்கரை விளக்கமாகும். 144 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கலங்கரை விளக்கம் 1902ம் ஆண்டில் ஆங்கிலேயரால் கட்டப்பட்டிருக்கிறது.

பார்வையாளர்கள் இந்த கலங்கரை விளக்கத்தை பார்ப்பதற்கு பிற்பகம் 3.30 மணியிலிருந்து 5.30 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர். கோட்டைச்சிதிலங்கள் மட்டுமல்லாமல் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சில தேவாலயங்களையும் இந்த கடற்கரைப்பகுதியில் பயணிகள் பார்க்கலாம்.

தனது இயற்கை எழில் மற்றும் வரலாற்று அம்சங்கள் ஆகியவற்றால் இந்த தங்கசேரி பீச் பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தின் தங்கக்கதிர்கள் இந்த கடற்கரையை குளிப்பாட்டும் காட்சியை பார்த்து ரசிப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் கூடுவதால் கடற்கரைச்சூழல் உற்சாகமாக தோற்றமளிக்கிறது. நீச்சல், உலாவுதல் மற்றும் நீர்விளையாட்டுகள் போன்றவற்றுக்கு இந்த தங்கசேரி பீச் ஏற்ற ஸ்தலமாக உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 May,Sun
Check Out
11 May,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon