சரவதி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகிலேயே இந்த மூகாம்பிகா வனவிலங்கு சரணாலயமும் அமைந்துள்ளது.
247 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படும் இது பசுமை மாறா மற்றும் மித பசுமை மாறா இலையுதிர் காடுகளை கொண்டுள்ளதாய் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. காட்டெருமை, குள்ள நரி, மான் போன்ற மிருகங்களை இங்கு காணலாம்.
மேலும் பலவிதமான பறவை இனங்களையும் இங்கு பயணிகள் பார்த்து ரசிக்கலாம். அரிவாள் மூக்கன், புல்புல், பலவண்ணப்புறா போன்றவை இங்கு காணப்படுகின்றன. இங்கு அருகாமையிலுள்ள மூகாம்பிகா கோயிலுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.மூகாம்பிகா கோயிலுக்கு விஜயம் செய்ய உகந்த காலம் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையான இடைப்பட்ட காலம் ஆகும். இக்காலத்தில் பயணிகள் மலைஏற்றம் மற்றும் கூடாரத்தங்கல் போன்ற அம்சங்களை இந்த மலைப்பிரதேசத்தில் ரசித்து அனுபவிக்கலாம்.



Click it and Unblock the Notifications