குருமா எனும் இந்த சிறிய கிராமம் கொனார்க் நகரத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. இது சூரியக்கோயில் ஸ்தலத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 1971 மற்றும் 1975ம் ஆண்டுகளில் இங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளுக்கு பின்னர் இந்த கிராமம் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தது.
அகழ்வாராய்ச்சிகளின்போது இக்கிராமப்பகுதியில் ஒரு உயர்ந்த சுவர் அமைப்பு, ஹெருகா அல்லது தருமா சிலைகள், சூரியக்கடவுள் மற்றும் புத்தர் சிலைகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. எனவே அதிலிருந்து இந்த கிராமம் ஒரு புத்த யாத்ரிக ஸ்தலமாகவும் புகழ் பெறத்துவங்கியுள்ளது.
இந்த புராதன ஸ்தலத்தில் காணப்படும் அமைப்புகள் 9 மற்றும் 10ம் நூற்றாண்டுகளை சேர்ந்த ஒரு புத்தவிஹாரத்தின் மிச்சங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இரண்டு கால்களையும் குறுக்கே போட்டு அமர்ந்த நிலையில் இந்த ஸ்தலத்திலுள்ள புத்தர் சிலை காணப்படுகிறது. அவரது வலது கை பூமிஸ்பர்ச முத்திரையுடனும் இடது கை இடது காலில் வைத்தவாறும் காட்சியளிக்கிறது.
அது மட்டுமல்லாமல் இந்த சிலையுருவத்தின் தலையில் ஒரு கிரிடமும் கழுத்தில் ஒரு ஆபரண மாலையும் காணப்படுகிறது. மடாலயத்தின் முழு அமைப்பு ஏதும் இந்த ஸ்தலத்தில் காணப்படவில்லை என்றாலும் இந்த தொல்லியல் ஸ்தலத்துக்கு சுற்றுலாப்பயணிகள் மற்றும் புத்த யாத்ரீகர்கள் விருப்பத்துடன் விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications