ஹீரேஹல்லா ஆற்றின் இடதுபுறக்கரையில் இந்த கொப்பல் நகரம் அமைந்துள்ளது. இங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையான கொப்பல் கோட்டை 400 மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.
1786ம் ஆண்டு திப்பு சுல்தான் இந்த கோட்டையை மராத்தியர்களிடமிருந்து கைப்பற்றி பிரஞ்சு பொறியாளர்களைக்கொண்டு புதுப்பித்துள்ளார். இந்த கோட்டையில் உறுதியான கட்டமைப்பினை ஆங்கிலேயர்களும் வியந்து போற்றியுள்ளனர். 1790 ம் ஆண்டு நிஜாம் மன்னருடன் சேர்ந்து ஆங்கிலேயர் இந்தக்கோட்டையை கைப்பற்றியுள்ளனர்.பயணிகள் கொப்பல் நகரத்தை சுலபமாக சாலைப்போக்குவரத்து மற்றும் ரயில் மூலமாக சென்றடையலாம். குண்டக்கல் – ஹூப்ளி ரயில்பாதையில் கொப்பல் அமைந்துள்ளது. அருகிலுள்ள முக்கிய நகரங்களான பெங்களூரு, விஜயவாடா மற்றும் பெல்காம் போன்றவற்றிலிருந்து கொப்பல் நகரத்துக்கு ரயில் சேவைகள் உள்ளன.
மேலும் பெங்களூரு, ஹைதராபாத், ஹூப்ளி, கோவா, மைசூர் போன்ற நகரங்களிலிருந்து நிறைய பேருந்து சேவைகளும் உள்ளன. இது தவிர கொப்பல் நகரத்தில் மஹாதேவா கோயில் (இட்டகி), ஹுலிகெம்மா கோயில் (முனிராபாத்), மல்லிகார்ஜுனா கோயில் (குக்கனூர்) போன்றவையும் முக்கிய சுற்றுலா அம்சங்களாக உள்ளன.



Click it and Unblock the Notifications