Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோட்டா » ஈர்க்கும் இடங்கள் » கவர்ன்மெண்ட் மியூசியம்

கவர்ன்மெண்ட் மியூசியம், கோட்டா

38

கோட்டா நகரத்தின் பிரபல்யமான சுற்றுலா அம்சமான கவர்ன்மெண்ட் மியூசியம் பிரிஜ் விலாஸ் பேலஸ் அரண்மனையின் உள்ளே அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பழைய நாணயங்கள், புராதன நூற்பிரதிகள் மற்றும் ஹடோத்தி சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள சிற்பங்களில் பரோலியிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள அழகிய சிற்பம் கலையம்சத்துடன் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இங்குள்ள சிலைகளில் 4ம் நூற்றாண்டைச்சேர்ந்த சில பழமையான சிலைகளும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கு வைக்கப்பட்டுள்ள நூற்பிரதிகள் மற்றும் ஓவியங்கள் வரலாற்று கால மக்களின் படைப்பாக்கத்திறனுக்கு சான்றாக காட்சியளிக்கின்றன. இவைதவிர, அழகிய ஆடைகள் மற்றும் கைவினை கலைப்பொருட்களையும் இங்கு பயணிகள் பார்க்கலாம்.

இந்த அருங்காட்சியகத்துக்கு விஜயம் செய்ய விரும்புவோர் ஜெய்ப்பூர் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகப்பிரிவு இயக்குநரகத்தில் முன் அனுமதி பெற வேண்டியுள்ளது. வெள்ளி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இது மூடப்படுகிறது.

வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயணிகள் அருங்காட்சியகத்துக்கு விஜயம் செய்யலாம். அனுமதிக்கட்டணமாக 2 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 May,Sun
Check Out
11 May,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon