Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோவளம் » ஈர்க்கும் இடங்கள் » அனலோத்பவ மாதா சர்ச்

அனலோத்பவ மாதா சர்ச், கோவளம்

39

கோவளம் சுற்றுலாத்தலத்திற்கு அருகிலுள்ள ஒரு மீனவக்கிராமத்தின் கடற்கரையில் இந்த அனலோத்பவ மாதா சர்ச் எனும் பழமையான தேவாலயம் அமைந்துள்ளது. கோவளம் கடற்கரைகளிலிருந்து 6 கி.மீ தூரத்திலுள்ள இப்பகுதி ரம்மியமான சூழல் மற்றும் கடற்கரைக்காட்சிகளை கொண்டுள்ளது.

மேலும், அடர்ந்த வனப்பகுதியில் நடுவே இந்த தேவாலயம் வீற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மழைக்காலங்களில் இப்பகுதி சொர்க்கபூமி போன்ற இயற்கை எழிலுடன் காட்சியளிக்கிறது.

இந்த தேவாலயத்திலிருந்து சிறிது தூரம் நடந்தாலே அழகிய வெண்மணற் கடற்கரைப் பகுதியையும், மீனவக் குக்கிராமங்களையும் அடையலாம். மீன்பிடித்தலை மட்டுமே தொழிலாக கொண்ட மீனவக் குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன.

கேரள மாநிலத்தில் கடலரிப்பினால் பாதிக்கப்படாத சில கடற்கரைகளுள் இந்த தேவாலயத்தை ஒட்டிய கடற்கரையும் ஒன்றாகும். நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள இப்பகுதியில் கடல் நீர் இறக்கத்தில் காணப்படுவதால் கடற்கரை பாதிப்புக்குள்ளாகாமல் நிலைத்துள்ளது.

தேவாலயப் பிரார்த்தனைகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஞாயிறு, திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் இந்த அனலோத்பவ மாதா சர்ச்’சுக்கு விஜயம் செய்யலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Apr,Tue
Return On
08 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Apr,Tue
Check Out
08 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Apr,Tue
Return On
08 Apr,Wed