Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கிருஷ்ணகிரி » ஈர்க்கும் இடங்கள் » தளி

தளி, கிருஷ்ணகிரி

20

அமைதியான, அழகிய சோலையைப் போன்ற தளி கிராமம் 'லிட்டில் இங்கிலாந்து' என்ற பெயரைப் பெருமையுடன் பெற்றிருக்கும் சுற்றுலாத் தலமாகும். எண்ணற்ற ஏரிகள், சிறு மலைக்குன்றுகள் மற்றும் மகிழ்ச்சியை உறுதியளிக்கும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றையுடைய தளி ஒவ்வொருவருக்கும் ஒருவித உணர்வைத் தரும் சுற்றுலாத்தலமாகும்.

ஒசூரில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள தளி கிராமத்திற்கு தமிழ் நாட்டின் இதர பகுதிகளிலிருந்தும், கேரளாவிலிருந்தும் சென்று வர முடியும். மலையேற்றம் மற்றும் மலை ஏறுதல் ஆகியவற்றிற்கு ஏற்ற நிலப்பகுதிகளை கொண்டுள்ள இடமாக தளி புகழ் பெற்றிருக்கிறது.

தளி பள்ளத்தாக்கின் செங்குத்தான ஒற்றையடிப்பாதைகளில் ஹைக்கிங் செல்லும் போது கிடைக்கும் காட்சிகள் வேறெங்கும் கிடைப்பதில்லை. தளியின் ஆண்டு முழுவதுமே குளுமையாக இருக்கும் பகுதியாக இருப்பதால் இயற்கையாகவே கடுமையான வெப்பத்தை எதிர் கொள்ளும் தமிழ் நாட்டிலும், உள்ளூர்வாசிகளுக்கும் மிகவும விரும்பத்தக்க சுற்றுலாத் தலாமாக இருக்கிறது.

தளி கிராமம், கிருஷ்ணகிரி, பெங்களூர் மற்றும் ஒசூருக்கு மிக அருகில் உள்ளதால் பெங்களூர் செல்ல கிருஷ்ணகிரி வழியாக செல்பவர்கள் சற்று நேரம் நின்று இயற்கையை ரசித்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவ்விடத்தின் குளுமையும், அமைதியும் இதனை கடந்து செல்பவர்களை சுற்றுலா வரவும், இயற்கையின் மடியில் ஓய்வெடுக்கவும் அழைக்கும் பணியை செவ்வனே செய்து வருகின்றன.

இது மட்டுமல்லாமல் 1530-ல் தேன்கனிக்கோட்டையில் பாளையக்காரர்களால் கட்டப்பட்ட கோட்டையும் வரலாற்று ஆர்வலர்களை ஈர்க்கும் இடமாக இருக்கிறது. இந்த கோட்டையின் சில பகுதிகள் சிதைந்து கிடந்தாலும் இன்றும் வரலாற்றைத் தாங்கி நின்று கொண்டிருக்கிறது.

கடவுள் பக்தியுடன் வரும் சுற்றுலாப் பயணிகள் அருகிலிருக்கும் வேணுகோபால சுவாமி கோவிலுக்கும் சென்று வரலாம். எந்தவொரு சீசனிலும் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுள்ள இடமாக விளங்குகிறது தளி கிராமம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue