குக்கே சுப்ரமண்யாவுக்கு வருகை தரும் பயணிகள் மறக்காமல் பார்த்து ரசிக்க வேண்டிய மற்றொரு அம்சம் இந்த குமார பர்வதம் ஆகும். 4000 அடி உயரத்தில் உள்ள இந்த அழகான மலையிலிருந்து கீழே உள்ள சோமவார்பேட்டை நகரத்தை பார்த்து ரசிக்க முடியும்.
குக்கே சுப்ரமண்யா கோயிலிலிருந்து 13 கி.மீ தூரத்தில் இருக்கும் இந்த மலையின் சிகரம் 1712 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.குமார பர்வத உச்சியில் சாளிக்கிராமம் என்று அறியப்படும் வெண்கற்களும் சிவலிங்கங்களும் காணப்படுகின்றன.
குமாரலிங்கம் என்று அறியப்படும் அறுமுக சிவலிங்கமும் இந்த சிகரத்தில் காணப்படுகிறது. மலையேற்றத்தை விரும்பும் சாகச விரும்பிகளுக்கு இந்த சிகரத்துக்கு விஜயம் செய்வது மிகவும் ஏற்றதாக உள்ளது.



Click it and Unblock the Notifications