குலு சுற்றுலாத்தலம் சாகசபொழுதுபோக்கு அம்சமான டிரக்கிங் எனப்படும் மலையேற்றத்திற்கு பிரசித்தி பெற்றுள்ளது. ஹிமாசலபிரதேசத்தில் மலையேற்றத்திற்கான கேந்திரமாக இப்பகுதி இயங்குகிறது.
பல எண்ணற்ற மலையேற்றப்பாதைகள் இங்கு நிறைந்திருந்தாலும், ரோஹ்டாங் பாஸ் எனும் கணவாய் பகுதிக்கு முன்னதாக ஜன்ஸ்கர், லடாக், லஹௌல் மற்றும் ஸ்பிட்டி ஆகிய பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள மலைப்பாதைகள் பெரும்பாலும் மலையேற்றத்துக்கு உகந்தவையாக உள்ளன.
பின்-பாஸ் எனும் இடத்திலிருந்து ஸ்பிட்டி பள்ளத்தாக்கிற்கும், மணிக்கரன் எனும் இடத்திலிருந்து சோட்டாதார எனும் இடத்திற்கும் செல்லக்கூடிய 10-12 நாட்களை உள்ளடக்கிய மலையேற்ற பயணங்கள் பயணிகளுக்காக ஏற்பாடு செய்து தரப்படுகின்றன.
பொதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்ட மலையேற்றப்பயணங்கள் தொலைதூர மலைப்பகுதிகளை உள்ளடக்கியதாகவும் இரண்டு மூன்று வார காலங்கள் எடுத்துக்கொள்ளக்கூடியதாகவும் அமையும்.
வழியில் மலையேறிகள் பல்வேறு புராதனக்கோயில்களை தரிசிக்கலாம். ஏப்ரல் முதல் ஜுன் மாத பாதி வரை மற்றும் செப்டம்பர் பாதியிலிருந்து அக்டோபர் பாதி வரையிலான காலம் மலையேற்றத்துக்கு உகந்ததாக உள்ளது.



Click it and Unblock the Notifications