Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குமரகம் » ஈர்க்கும் இடங்கள் » குமரகம் உப்பங்கழி

குமரகம் உப்பங்கழி, குமரகம்

36

குமரகம் உப்பங்கழி உலகெங்கிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் இயற்கை ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அம்சமாகும். இந்த உப்பங்கழிகளுக்கிடையில் அமைந்துள்ள சிறு சிறு தீவுத்திட்டுகளின் நிசப்தமும் பசுமையான தோப்புகளும் இதன் தனித்தன்மையான சிறப்பம்சமாகும். இப்பகுதியின் வித்தியாசமான சூழலும் பாரம்பரிய கேரள கட்டமைப்புகளும் சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பி ரசிக்கப்படுகின்றன.

குமரகம் உப்பங்கழிப்பிரதேசத்தை நன்றாக சுற்றிப்பார்த்து ரசிப்பதற்கு ஒரு படகுவீட்டை வாடகைக்கு அமர்த்திக்கொள்வது சிறந்தது. சிறு துடுப்புப்படகுகள் மூலமும் இந்த சிக்கலான கால்வாய்களை நன்றாக சுற்றிப்பார்த்து ரசிக்கலாம்.

இங்குள்ள படகுவீடுகளில் எல்லா நவீன வசதிகளூம் பொருத்தப்பட்டு குடும்பத்துடன் பிக்னிக் செல்லவும், தேனிலவு சுற்றுலா மேற்கொள்ளவும், நிறுவன ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தவும் ஏற்றதாக காட்சியளிக்கின்றன. சாகச பொழுதுபோக்குகளை விரும்பும் இளம் மனங்களுக்கும் இவை மிக பிடித்தமானவையாக பிரசித்தி பெற்றுள்ளன.

படகுவீடு பயணம் மற்றும் உப்பங்கழி சுற்றுலாவை ஏற்பாடு செய்யும் எராளமான தனியார் சேவைகள் இங்கு நடத்தப்படுகின்றன. ஒரு முழு நாள் பயணம், ஒரு இரவுத்தங்கல் அல்லது மணிக்கணக்கில் பயணம் என்று பயணிகள் தங்கள் வசதிபோன்று இந்த படகுவீடுகளை வீடுகளை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம்.

இந்த படகு வீடுகள் வரவேற்பறை, படுக்கை அறை, சமையலறை, பொழுதுபோக்கு சாதனங்கள் போன்ற எல்லா நவீன வசதிகளையும் கொண்டுள்ளன. அனுபவம் மிக்க பணியாளர்கள் இந்த படகு வீடுகளில் பயணிகளுக்கு உதவுவதற்காகவும் உப்பங்கழிப்பகுதியின் அம்சங்களை சுற்றிக்காண்பிக்கவும் அமர்த்தப்பட்டுள்ளனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue