கேரளாவிலுள்ள வரலாற்றுப்பின்னணி கொண்ட முக்கிய புராதன கோயில்களில் ஒன்றாக இந்த வைக்கம் மஹாதேவா கோயில் புகழ்பெற்றுள்ளது. வேம்பநாட் ஏரிக்கரையில் அமைந்துள்ள வைக்கம் நகரில் இந்த கோயில் உள்ளது.
சைவ மார்க்கத்தை சேர்ந்தவர்களும் வைணவ மார்க்கத்தை சேர்ந்தவர்களும் சேர்ந்தே வழிபடும் ஒருசில சிவத்தலங்களில் ஒன்றாக இந்த வைக்கம் மஹாதேவா கோயில் விளங்குகிறது.
கேரளாவின் வரலாற்றுப்பக்கங்களில் இந்த கோயிலின் பெயர் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு விட்டது எனும் சொல்லும்படியாக, முக்கிய வரலாற்று நிகழ்வான ‘வைக்கம் சத்யாக்கிரகம்’ (தீண்டாமை எதிர்ப்பு போராட்டம்) 1924ம் ஆண்டு இந்த கோயிலில் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.
வருடாவருடம் நவம்பர்-டிசம்பர் மாதத்தில் வைக்கம் அஷ்டமி எனும் திருவிழா சிறப்பாக இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது. விநாயக்கடவுளின் கற்சிலை மற்றும் நந்தி சிலை ஆகியன இக்கோயில் வளாகத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்களாகும்.
குமரகம் சுற்றுலாத்தலத்திலிருந்து 22 கி.மீ தூரத்திலும், கோட்டயம் நகரத்திலிருந்து 32 கி.மீ தூரத்திலும் உள்ள வைக்கம் மஹாதேவா கோயிலை சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம்.



Click it and Unblock the Notifications