கண்டல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த ‘பிரபு மூக்கு’ என அறியப்படும் சிகரம் ஆங்கிலேயர் காலத்தை சேர்ந்த வெலிங்க்டன் பிரபுவின் மூக்கைப்போன்று இருப்பதாக இப்படி ஒரு விசித்திர பெயரினைப் பெற்றுள்ளது. நாகத்தின் தலையைப்போன்று இருப்பதால் இதற்கு நாக்பாணி என்ற மற்றொரு உள்ளூர் பெயரும் உண்டு (நாகம்=பாம்பு; பாணி=தலை).
இதன் உச்சியை கடுமையான மலை ஏற்றத்திற்குப்பிறகே அடையமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் உச்சியை அடைந்த பிறகு காணக்கிடைக்கும் காட்சிகள் பிரமிக்க வைக்கும் இயல்பு கொண்டவை. சிகரத்திலிருந்து கீழே மலையைச்சுற்றிலும் உள்ள பசுமைச்சமவெளியை கண்குளிர பார்த்து ரசிக்க முடிகிறது.



Click it and Unblock the Notifications