Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மால்பே » ஈர்க்கும் இடங்கள் » தரியா பஹதூர்காட் கோட்டை

தரியா பஹதூர்காட் கோட்டை, மால்பே

12

இந்த தரியா பஹதூர்காட் தீவு மால்பே பகுதியில் உள்ள முக்கியமான  தீவுகளில் ஒன்றாகும். உடுப்பி பிரதேசத்தில் உள்ள மால்பே தீவுகள் மற்றும் கடற்கரைக்கு பிரசித்தமாக விளங்குகிறது.

ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த மால்பே தீவுகளை கண்டு ரசிக்க வருகை தருகின்றனர். தரியா பஹதூர்காட் கோட்டை இந்த தீவுகளில் ஒன்றில் அமைந்துள்ளது.

இந்த தீவு 250 கஜ நீளத்துக்கு சுமார் 1.6 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. சிறியதாக இருந்தாலும் எழில் கொஞ்சும் இயற்கை அம்சங்களை இது பெற்றுள்ளது.

இந்த கோட்டைக்கு அருகில் ஒரு பழமையான ஓடு தயாரிப்பு தொழிற்சாலையும் சில அழகிய கோயில்களும் காணப்படுகின்றன. பிடனூர் பஸவப்ப நாயக்கரால் இந்த கோட்டை பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. மால்பே கடற்கரையிலிருந்து சில மைல்கள் மேற்காக இந்த தரியா பஹதூர்காட் கோட்டை அமைந்துள்ளது.

உடுப்பி ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலேயே இந்த தரியா பஹதூர்காட் கோட்டை அமைந்துள்ளதால் இங்கு வருவது மிக எளிது. மால்பே நகரத்திலிருந்து இந்த கோட்டைத்தீவுக்கு படகுப்போக்குவரத்து மலிவான கட்டணத்தில் இயக்கப்படுகிறது. உடுப்பியிலிருந்து மால்பே பகுதிக்கு நல்ல சாலை வசதிகளும் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue