மணாலி ஜூ எனப்படும் இந்த வனவிலங்கு காட்சிக்கூடம் மணாலியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இங்கு ஹிமாச்சல் பிரதேசத்தின் தேசியப்பறவையான மோனல் எனப்படும் ஒருவகை காட்டு மயில் பறவையை பார்க்கலாம்.
முதிர்ச்சியடைந்த ஆண் மோனல் பறவைகள் மினுமினுப்பான பச்சை நிறக்கொண்டை மற்றும் பலவண்ண தோகையுடன் காட்சியளிக்கின்றன. பெண் மோனல் பறவைகள் சாதாரண தோற்றத்துடன் பழுப்பு நிற உடலும் கறுப்பு தோகையும் கொண்டதாக காணப்படுகின்றன.
பல காலமாக ஆண் மோனல் பறவைகள் அவற்றின் மினுமினுப்பான தோகைக்காக வேட்டையாடப்பட்டு வந்துள்ளன. இறுதியில் 1982 ம் ஆண்டு இதற்கான தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
மோனல் பறவைகளை தவிர வேறு பல பறவைகளையும் விலங்குகளையும் பயணிகள் இந்த மணாலி வனவிலங்கு காட்சிக்கூடத்தில் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications