ஓல்ட் மணாலி பகுதியில் அமைந்துள்ள இந்த மனு கோயில் பியாஸ் ஆற்றின் கரையில் உள்ளது. நகரத்தின் மையப்பகுதியிலிருந்து 3 கி.மீ தூரத்தில் இந்த கோயில் அமைந்திருக்கிறது.
ஹிந்து புராண ஐதீகங்களின்படி பூமியின் மனித வர்க்கத்தை நிறுவிய அவதாரக்கடவுளாக கருதப்படும் மனுவுக்கான ஒரே கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. 7 யுகங்களை ஆக்கி அழித்த பின்னர் மனு இந்த பிரதேசத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த கொயிலின்தான் மனு தவத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் ஐதீக நம்பிக்கைகள் நிலவுகின்றன. வழுக்கக்கூடிய பாறைப்பாதையின் வழியே மிகுந்த சிரமப்பட்டு இந்த கோயிலை சென்றடைய வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications