மணாலி சுற்றுலாத்தலத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு ஏற்ற இடமாக சோலங் பள்ளத்தாக்கு பகுதி அமைந்துள்ளது. இது மணாலியிலிருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
அதிக அனுபவம் இல்லாதவர்களுக்கு ஏற்ற இரண்டு முக்கியமான பனிச்சரிவுகள் இங்கு உள்ளன. சறுக்கு முனைப்பகுதிக்கு செல்ல வசதியாக இரண்டு லிஃப்ட்டுகளும் இங்கு அமைக்கப்பட்டிருக்கின்றன.
மார்ஹி, குலாபா, துண்டி, ரோஹ்தங் பாஸ் மற்றும் படால்சு போன்ற இடங்களிலும் பனிச்சறுக்கு விளையாட்டில் பயணிகள் ஈடுபடலாம். டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் இந்த பொழுதுபோக்கு விளையாட்டுக்கு ஏற்றவையாக உள்ளன.
இந்த விளையாட்டுக்கு தேவையான பனி உறைவு இக்காலத்தில் நிலவுகிறது. ரோஹ்தங் பாஸ் மற்றும் படால்சு போன்ற இடங்களில் கோடைக்காலத்திலும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடலாம்.
உள்ளூர் பனிச்சறுக்கு ஏற்பாட்டாளர்கள் பயணிகளுக்கு தேவையான பனிச்சறுக்கு உபகரணங்களையும் பயிற்சியாளர்களையும் வழங்குகின்றனர். 3-5 நாட்களை உள்ளடக்கிய பனிச்சறுக்கு சுற்றுலாப்பயணங்களையும் பயணிகள் மேற்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications