மண்டி மாவட்டத்தில் கர்சோக் பள்ளத்தாக்குக்கு அருகிலுள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத்தலம் இந்த சிண்டி ஆகும். இந்த ரம்மியமான மலைவாசஸ்தலம் மலைகளாலும், பைன் மற்றும் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகளாலும் சூழப்பட்டுள்ளது.
மேலும் சிறிய கோயில்கள் மற்றும் ஆப்பிள் தோட்டங்கள் இப்பகுதியின் அழகை கூட்டும் விதத்தில் அமைந்துள்ளன. கடல் மட்டத்திலிருந்து 1825 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலம் ஒரு உள்ளூர் மார்க்கெட் பகுதியையும் கொண்டுள்ளது. இங்கு பயணிகள் மெத்தைப்போர்வைகள் மற்றும் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் போன்றவற்றை வாங்கலாம்.



Click it and Unblock the Notifications