கடல் மட்டத்திலிருந்து 2200மீ உயரத்தில் உள்ள இந்த மலைஸ்தலமானது ஹைக்கிங், டிரெக்கிங், சிகரமேற்றம் மற்றும் பனிச்சறுக்கு போன்ற சாகச பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பிரசித்தி பெற்றுள்ளது.
இரவு நேர ‘சஃபாரி’ எனப்படும் சாகச சிற்றுலாவும் இங்கு பயணிகளால் விரும்பி அனுபவிக்கப்படும் அம்சமாக உள்ளது. மண்டியிலிருந்து 67 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஜஞ்ஜெஹ்லி பகுதியில் பல மலையேற்றப்பாதைகளும் அமைந்துள்ளன. இவை ஷோஜா, கர்சோக், ஷிகாரி தேவி கோயில், சிண்டி, கம்ரு நாக் கோயில் மற்றும் ராம்பூர் போன்ற ஸ்தலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலேயர் இப்பகுதியை சிம்லாவுக்கு பதிலாக தங்கள் கோடைத்தலைநகரமாக பயன்படுத்த விரும்பியதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் ஜஞ்ஜெஹ்லி பிரதேசத்தை ஆண்ட ராஜ வம்சத்தினர் கடைசி வரை இந்த நகரப்பகுதியை அவர்களுக்கு விட்டுத்தரவில்லை என்றும் தெரியவருகிறது.



Click it and Unblock the Notifications