பிரசித்தமான சித்தா கணபதி கோயில் மண்டி நகரத்தில் ரீஜனல் ஹாஸ்பிடலுக்கு அருகில் அமைந்துள்ளது. சிவனின் மூத்த குமாரரான விநாயகருக்காக உருவாக்கப்பட்டுள்ள இக்கோயில் சித் சேன் எனும் முற்காலத்திய மண்டி ராஜ்ஜிய மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது. தலபுராணங்களின்படி, மன்னரின் யோககுருவான சாதனா எனும் யோகி இந்த கோயிலில் தியானம் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications