முன்ட்ரா தாலுக்காவிலிருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பத்ரேஷ்வர், கடற்கரையிலிருந்து 1 கி.மீ.-கும் குறைவான தூரத்திலேயே இருக்கிறது. சமயஞ்ச்சார்ந்த முக்கியத்துவம் பெற்ற இடமாக இது விளங்கினாலும், இதற்கு கிடைக்க வேண்டிய புகழை இது இன்னும் எட்டவில்லை.
குஜராத்திலுள்ள முக்கிய ஜெயின் புனித ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது எப்போது என்பதற்கான எந்த ஒரு சான்றும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த கோவிலை சுற்றியுள்ள 52 சிறிய கோவில்களில் ஒன்றில் கி.மு. 500-ஐ சேர்ந்த பர்ஷவனத் கடவுளின் அசல் சிலை இருக்கிறது. முதன்மை கோவில் ஆர்பில் கற்களால் கட்டப்பட்டுள்ளது. ராட்சச தூண்களோடு விளங்கும் இந்த கோவில் பார்ப்பவர்களை எளிதில் ஈர்த்து விடும்.
ஜெயின் வளாகத்தை தவிர, பத்ரேஷ்வரில் 12-ஆம் நூற்றாண்டு இறுதியில் கட்டப்பட்ட இரண்டு மசூதிகளும் உள்ளன. ஈரானியர்கள் டெல்லி செல்வதற்கு முன் குஜராத்தின் மேல் படை எடுத்திருக்கிறார்கள் என்பதற்கான அத்தாட்சியே இவை.



Click it and Unblock the Notifications