வடக்கு கோவாவில் உள்ள மாபுஸா நகரம் பாகா, கலங்கூட் மற்றும் அஞ்சுனா போன்ற கோவாவின் புகழ்பெற்ற கடற்கரைகளுக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது. மேலும் கோவா தலைநகர் பனாஜி, மாபுஸாவிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் கோவாவுக்கு சுற்றுலா வரும் பயணிகள் மாபுஸாவில் குறைந்த வாடகைக்கு ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து தங்கிக்கொள்ள முடியும்.
மாபுஸாவின் வெள்ளிக்கிழமை சந்தையில் விற்பனை செய்யப்படும் கைவினைப் பொருட்கள், வேளாண்மை பொருட்கள், பழவகைகள் போன்றவை சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். அதுமட்டுமில்லாமல் மாபுஸா நகரம் அதன் பல்வகை கடற்கரை உணவுக்காகவும் பிரபலமாக அறியப்படுகிறது.
பனாஜி உள்ளிட்ட கோவாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மாபுஸாவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தவிர வாடகை கார்களின் மூலமும் நீங்கள் மாபுஸா நகரத்தை அடையலாம். ஆனால் ஒரு சில கார் ஓட்டுனர்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதால் நீங்கள் கவனத்துடன் இருப்பது அவசியம்.



Click it and Unblock the Notifications