Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மதுரா » ஈர்க்கும் இடங்கள் » துவாரகாதீஷ் கோயில்

துவாரகாதீஷ் கோயில், மதுரா

28

மதுராவில் உள்ள துவாரகாதீஷ் கோயில், குவாலியர் எஸ்டேட்டின் பொக்கிஷமாகக் கருதப்படும் சேத் கோகுல் தாஸ் பரிக் என்பவரால் 1814 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.

இக்கோயில், நகரின் கரையோரத்தில் அமைந்துள்ள முக்கியமான மலைத்தொடர்களுள் ஒன்றான விஷ்ரம் மலைத்தொடருக்கு அருகில் உள்ளது. கிருஷ்ண பகவான் “துவாரகாதீஷ்” என்றும் “துவாரகாவின் மன்னர்” என்றும் அழைக்கப்படுவதால் இக்கோயிலுக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்சமயம், இக்கோயில் வல்லபாச்சார்யா பிரிவினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

இங்குள்ள மூலஸ்தானத்தில் கிருஷ்ண பகவான் மற்றும் அவரது பிரியசகியான ராதை ஆகியோரின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இக்கோயிலில் பிற ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கோயிலின் உட்பகுதி, நேர்த்தியான கலை, சிற்பம் மற்றும் ஓவிய வேலைகளைக் கொண்டு அழகுற காட்சியளிக்கின்றது.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரியும் இக்கோயில், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வரும் கிருஷ்ண பகவானின் பிறந்ததினமான ஜென்மாஷ்டமி போன்ற வைபவங்களின் போது மேலும் பல பக்தர்களை வரவழைக்கக் கூடியதாகத் திகழ்கின்றது.

மேலும் மழைக்காலத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் ஷ்ரவன் மாதத்தின் கடைசியில் இக்கோயிலில் நடைபெறும் ஊஞ்சல் திருவிழாவும் உள்ளூரில் மிகவும் புகழ் பெற்றுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat