ரங்கபூமி, நகரின் பிரதான தபால் அலுவலகத்திற்கு எதிர்ப்புறத்தில் அமைந்துள்ளது. இவ்விடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் வழிபாட்டு ஸ்தலமாகும். புராணங்களில், கிருஷ்ண பகவான் தன் தாய்மாமனாகிய கம்சனுடன் துவந்த யுத்தத்தில் ஒற்றைக்கு ஒற்றை நின்று மோதிய யுத்த களமாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த யுத்தத்தில் கிருஷ்ண பகவான் வென்று, தன் பெற்றோரை அவனது பிடியில் இருந்து விடுவித்து, தன் தாய்வழித் தாத்தாவை அரியணையில் ஏற்றி முடிசூட்டினார்.
புராணங்களின் படி, கம்சனின் தங்கையாகிய தேவகிக்குப் பிறக்கும் ஏழாவது குழந்தை அவனது வீழ்ச்சிக்கும், இறப்புக்கும் காரணமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதால் தன் தங்கையாகிய தேவகி மற்றும் அவரது கணவரை சிறையில் அடைத்ததாகக் கூறப்படுகிறது.
மதுரா ஒரு முக்கிய பௌத்த மையமாகவும் திகழ்கிறது. ரங்கபூமி, மௌரியன் காலத்தைய பௌத்த பாணியில் அமைந்த கட்டடங்களால் சூழப்பட்டுள்ளது.
மௌரியன் இராஜ்ஜியம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து புத்த மதத்தின் முக்கியத்துவமும் இங்கு வீழ்ச்சியடைந்து, கொஞ்சம் கொஞ்சமாக இந்து மதம் தழைத்தோங்க ஆரம்பித்திருக்கின்றது



Click it and Unblock the Notifications