பீகாரில் உள்ள மோத்திஹரி நகரம் புனித பயணம் மேற்கொள்பவர்களும், உல்லாச பயணம் மேற்கொள்பவர்கள் மத்தியிலும் சரி, புகழ் பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. பிராதன நகரமான பாட்னாவில் இருந்து இந்நகரம் 156 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
வரலாற்று சிறப்பம்சத்திற்காகவே இதன் சுற்றுலா பெயர் பெற்றது. வெள்ளையர்கள் ஆட்சியை எதிர்த்து காந்தியடிகள் முதன் முதலில் உப்பு சத்யாகிரகத்தை தொடங்கியது மோத்திஹரி நகரத்தில் இருந்து தான். இதன் வரலாற்று முக்கியத்துவம் இதனை கண்டிப்பாக சுற்றிப்பார்க்க வேண்டிய தலமாக வைத்துள்ளது.
இங்குள்ள உள்ளூர் குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை உருவாக்கி, மோத்திஹரி நகரம் கல்வி என்ற கனியை ருசிக்க செய்த பெருமையும் காந்தியடிகளையே சேரும்.
புத்த மதத்தை சேர்ந்த முக்கியமான தூண் இங்கு உள்ளதால் வருடம் முழுவதும் பல புத்த மத சுற்றுலாப் பயணிகளையும் இந்த இடம் காந்தம் போல் ஈர்க்கிறது.
மோத்திஹரி தூண் என்று அழைக்கப்படும் இந்த தூண் 104 அடியில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்டமான தூணாகும். தற்போது உள்ள தூண் ஏற்கனவே இருந்த பெரிய தூண் அழியப்பட்டு எஞ்சியிருக்கும் மிச்சமே என்று பலரும் நம்புகின்றனர்.
புகழ் பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெலின் பிறப்பிடமாக மோத்திஹரி இருப்பதால் இது இந்த இடத்தின் மற்றொரு சிறப்பம்சமாக விளங்குகிறது. இவருடைய நினைவுச் சின்னத்தையும் இங்கு காணலாம்.
இங்குள்ள மகாத்மா காந்தி அருங்காட்சியகமும் கல் தூணும் மோத்திஹரி சுற்றுலாவில் தனித்தன்மையுடன் விளங்கும் தலங்களாகும். காகித தொழிற்சாலை, சர்க்கரை ஆலை மற்றும் இன்னும் சில தொழிற்சாலைகள் என மோத்திஹரியில் பல சிறிய அளவு தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
மோத்திஹரியில் உள்ள சர்க்கரை ஆலை பீகாரில் உள்ள பெரிய சர்க்கரை ஆலைகளில் ஒன்றாகும். நகரத்தை இதர இடங்களுடன் இணைக்க சாலை மற்றும் இரயில் வசதிகளை நன்றாக ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது மோத்திஹரி சுற்றுலா.
இங்குள்ள உள்ளூர் இரயில் நிலையமான பாப்புதம் மோத்திஹரி மூலம் அனைத்து முக்கிய பெருநகரங்களுக்கும் தேசிய தலைநகரத்துக்கும் இரயில் சேவைகளை இயக்குகின்றன.
கல்வி நிறுவனங்கள்,ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகள், காந்தி சங்கரஹலயா, ஜீல், காந்தி மைடன் போன்ற வரலாற்று தலங்கள், இமயமலை அடிவார இயற்கை அழகை கொண்டுள்ள இடங்கள் என இவைகளின் சம அளவிலான கலவையாக பார்க்கும் போது உங்கள் நேரத்தை செலவிட கண்டிப்பாக மோத்திஹரி ஒரு சிறந்த இடமாக இருக்கும்.
லிட்சி பழங்கள் மற்றும் சீனிக்கிழங்குகளின் தயாரிப்பில் அதிக புகழ் பெற்றுள்ளது மோத்திஹரியின் விவசாயம். மோத்திஹரியின் வானிலை கோடைக்காலத்தில் கடுமையானதாகவும், குளிர் காலத்தில் மிகவும் குளிருடன் இருக்கும். பருவக்காலம் முடிந்த பின் இங்கு சுற்றுலா வருவதே சிறப்பானது.



Click it and Unblock the Notifications