மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்தில் உள்ள மற்றொரு முக்கிய ஆன்மீக சுற்றுலா அம்சம் இந்த ஆதார் தேவி கோயில் ஆகும். துர்க்கா தேவிக்காக கட்டப்பட்டுள்ள இக்கோயில் ஒரு சிகரத்தின் உச்சியில் அமைந்துள்ள ஒரு குகையின் உள்ளே உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலுக்கு செல்ல பக்தர்கள் 365 படிக்கட்டுகளை ஏறிச்செல்ல வேண்டியுள்ளது. வருடத்தின் 365 நாட்களைக்குறிக்கும் வகையில் இப்படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
படிக்கட்டுகளில் ஏறும் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் துர்க்காதேவியின் அருளைப்பெறவேண்டி அதிக எண்ணிக்கையில் இக்கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications