மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்தில் அமைத்துள்ள பிரம்மா குமாரிகள் ஸ்பிரிச்சுவல் யுனிவர்சிட்டி ஒரு உலகப்புகழ் பெற்ற சமூக-ஆன்மீக கல்வி நிலையமாகும். இந்த ஆன்மீக பல்கலைக்கழகம் சர்வதேச பிரம்மா குமாரிகள் சங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது. உலக சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை பரப்புவதற்காக 1936ம் ஆண்டு இது நிறுவப்பட்டுள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் தியானம், யோகா மற்றும் ஆன்மீகம் குறித்த கல்வி கற்பிக்கப்படுகிறது. 132 நாடுகளில் 8500 மையங்களைக் கொண்டுள்ள பிரம்மா குமாரிகள் சங்கம் உலகமுழுவதும் 8,00,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications