குரு தத்தாத்ரேயா என்ற புகழ் பெற்ற யோகிக்காக இந்த தத்தாத்ரேயா கோயில் எழுப்பப்படுள்ளது. இது ஆரவல்லி மலைத்தொடரிலுள்ள குரு ஷிகார் எனும் உயரமான சிகரத்தில் அமைந்துள்ளது.
பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூன்று கடவுள்களின் அவதாரமாக இந்த குரு தத்தாத்ரேயா கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலுக்கு அருகிலேயே, தத்தாத்ரேயாவின் தாயார் ‘அஹில்யா’வுக்காக எழுப்பப்பட்டுள்ள கோயிலையும் பயணிகள் பார்க்கலாம். இது குருஷிக்கார் சிகரத்தின் வடமேற்குப்பகுதியில் உள்ளது.



Click it and Unblock the Notifications