மௌண்ட் அபு மலைப்பகுதியில் 800 மீட்டர் உயரத்திலுள்ள ஆரணா எனும் கிராமத்தில் புராதன நாகரிகம் தொடர்பான தொல்லியல் பானைகள் மற்றும் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வனத்துறை அதிகாரிகள் இப்பகுதியை தோண்டும்போது இந்த தொல்லியல் மிச்சங்களை கண்டறிந்துள்ளனர்.
இவை 1000 வருடங்களுக்கு முந்தையவை என்றும், பயணிகள் தங்கும் இடமாக இந்த ஸ்தலம் பயன்பட்டிருக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொல்பொருட்கள் கண்டடெடுக்கப்பட்ட இந்த இடம் தற்சமயம் ஒரு சுற்றுலாத்தலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
ருட்யார்டு கிப்ளிங் எழுதிய ‘ஜங்கிள் புக்’ கதையில் விவரிக்கப்படும் காட்டின் இயல்பை ஒத்திருப்பதால், அக்கதையின் நாயகன் பெயரான ‘மோக்ளி’ எனும் பெயரை அடிப்படையாக வைத்து ‘மோக்லி லேண்ட்’ என்று அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications