மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்தில் பிரசித்தமான சுற்றுலா அம்சமாக அறியப்படும் இந்த ‘டோட் ராக்’ எனப்படும் தவளைப்பாறை ஸ்தலம் நக்கி ஏரிக்கு அருகிலேயே அமைந்துள்ளது. ஒரு தவளையைப்போன்று காட்சியளிக்கும் பிரம்மாண்ட பாறை அமைப்பு இங்கு அமைந்திருப்பதால இந்த இடத்திற்கு டோட் ராக் (தவளைப்பாறை) எனும் பெயர் வந்துள்ளது.
டோட் ராக் தவிர இந்த இடத்தில் இதர பாறை அமைப்புகளான ஒட்டகப்பாறை, நந்திப்பாறை மற்றும் செவிலிப்பாறை போன்ற பாறை அமைப்புகளும் அமைந்துள்ளன. இந்தப்பாறை அமைப்புகளில் மலையேற்றம் போன்ற சாகசப் பொழுதுபோக்குகளிலும் பயணிகள் ஈடுபடலாம்.
மேலும், மலையேற்றப் பாதைகளின் வழியே பாறை உச்சியை நோக்கி ஏறும்போது நக்கி ஏரி மற்றும் சுற்றுப்புற இயற்கை எழில் போன்றவற்றை நன்கு ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications