மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்தின் பிரபல்யமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக ‘ட்ரெவர்’ஸ் டேங்க்’ எனப்படும் இந்த குளம் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த குளத்தை நிர்மாணித்த ‘ட்ரெவர்’ என்ற பிரிட்டிஷ் இஞ்சினீயரின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது.
ஒரு முதலைப்பண்ணையாக துவக்கத்தில் இந்தக்குளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த குளப்பகுதி பிரசித்தமான சிற்றுலாத்தலமாக (பிக்னிக் ஸ்பாட்) மாறியுள்ளது.
இங்கு புறாக்கள், மயில்கள், கௌதாரிகள் போன்றவற்றை பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இந்த இடத்தின் அமைதியான சூழலை ரசிப்பதற்காக பயணிகள் அதிக அளவில் இந்த இடத்துக்கு விஜயம் செய்கின்றனர்.