Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» முர்ஷிடபாத்

முர்ஷிடபாத் – நவாப்களின் நாற்காலி!

9

முன்னாட்களில் மக்சுதாபாத் என்றழைக்கப்பட்ட முர்ஷிடபாத் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிடபாத் மாநகராட்சியில் அமைந்துள்ள நகரமாகும். நம் நாட்டில் அதிக ஜனத்தொகை காணப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். கங்கை ஆற்றின் கிளை நதியாக விளங்கும் பாகிரதி நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த நகரம். இங்குள்ள ஹசார்டுவாரி அரண்மனைக்காக இந்த இடம் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த அரண்மனை ஹூக்லி நதிக்கு அருகில் அமைந்துள்ளது. இது கொல்கத்தாவிற்கு மிக அருகில் இருப்பதாலும் இங்கே சில சுற்றுலா தலங்கள் இருப்பதாலும் பல வருடங்களாக இங்கே பல சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

முர்ஷிடபாத்தில் ஷாப்பிங்!

கைவினைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விவசாயம் தான் முர்ஷிடபாத்தில் உள்ள முக்கியமான இரண்டு தொழில்களாகும். தெருவோரம் விற்கப்படும் மலிவு விலை பொருட்களுக்காகவும் இந்த இடம் புகழ் பெற்றுள்ளது.

இங்கு விற்கப்படும் அழகான டெரகோட்டா பொருட்களும் கூட மலிவு விலையில் கிடைக்கும். இந்த வட்டாரத்தின் மற்றொரு புகழ் பெற்ற பொருள் மர்ஷிடபாத் பட்டாகும். இந்திய புடவைகளின் நெய்தலுக்காக இது பயன்படுத்தப்படுகிறது.

முர்ஷிடபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

நவாப்களின் அரண்மனை மற்றும் ஆயிரம் கதவுகள் கொண்ட அரண்மனை என இந்த இடத்தில் உள்ள இரு இடங்களும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம்  இருக்கிறது.

ஆயிரம் கதவுகளை கொண்ட அரண்மனையை ஹசார்டுவாரி அரண்மனை என்றும் அழைக்கின்றனர். இந்நகரம் நவாப்களின் நாற்காலி என்று அழைக்கப்படுகிறது.

உணவு வகைகளும், திருவிழாக்களும்!

முர்ஷிடபாத்தில் பெங்காலி உணவு வகைகளை ருசிக்க தவற விடாதீர்கள். நல்ல ருசியுள்ள உணவை உண்ண வேண்டுமானால் தெருவோரம் உள்ள கடைகளுக்கு சென்று உண்ணுங்கள், முக்கியமாக ஆற்றில் பிடிக்கப்பட்ட மீன் உணவுகளை ருசித்து பாருங்கள்.

ஒரே ஒரு முறை இந்த நகரத்தில் உள்ள வீதிகளை சுற்றி வாருங்கள். கண்டிப்பாக மகாராஜா வாழ்ந்த காலத்துக்கு பின்னோக்கி உங்கள் மனது உங்களை அழைத்துச் செல்லும்.

நகரத்திற்குள் பயணிக்க ரிக்ஷாகளும் குதிரை வண்டிகளும் ஏராளமாக இங்கே கிடைக்கின்றன. இங்குள்ள பாரம்பரிய கட்டடங்கள் அனைத்தும் தூய்மையான வெண்ணிறத்தில் இஸ்லாமிய கட்டட அமைப்புடன் இருக்கும்.

முர்ஷிடபாத் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நல்ல அனுபவத்தை தரும், அது குடும்பமாக இருந்தாலும் சரி, தம்பதியராக இருந்தாலும் சரி, இல்லை தனியாளாக இருந்தாலும் சரி.

முர்ஷிடபாத்திற்கு சுற்றுலா வருவதற்கான சிறந்த பருவம்

துர்கா பூஜை, தீபாவளி மற்றும் தசரா போன்ற திருவிழாக்களின் போது இந்நகரத்துக்கு வருவதே சிறந்ததாகும். ஹோலி மற்றும் ராம நவமி போன்ற திருவிழாக்களும் இங்கு கொண்டாடப்படுகிறது.

இவ்வகை திருவிழாக்களின் போது இந்நகரமே வண்ணமயமாக காட்சி அளிக்கும். பல வகை பொருட்களை வாங்கி, சுவையான உணவுகளை அருந்தி மகிழலாம்.

முர்ஷிடபாத்தை அடைவது எப்படி?

முர்ஷிடபாத்தை விமானம், இரயில் மற்றும் சாலை வழியாக சுலபமாக வந்தடையலாம்.

முர்ஷிடபாத் சிறப்பு

முர்ஷிடபாத் வானிலை

சிறந்த காலநிலை முர்ஷிடபாத்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது முர்ஷிடபாத்

  • சாலை வழியாக
    கொல்கத்தாவிலிருந்து முர்ஷிடபாத்திற்கு தினமும் சீரான பேருந்து சேவைகள் உள்ளன. தினமும் அடுத்தடுத்து பேருந்துகள் கிடைக்கும். கொல்கத்தாவிலிருந்து 4 மணி நேரம் 15 நிமிடங்களில் இங்கு வந்து சேரலாம். தோராயமாக கொல்கத்தாவிலிருந்து 235 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த இடம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    முர்ஷிடபாத் இரயில் நிலையம் கொல்கத்தாவில் உள்ள ஹொவ்ராஹ் நிலையத்துடன் நேரடி இணைப்பில் உள்ளது. கொல்கத்தாவிலிருந்து நாட்டின் மற்ற இடங்களுக்கு இரயில் சேவைகள் உள்ளன. பங்களாதேஷிற்கு கூட இங்கிருந்து இரயில்கள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    முர்ஷிடபாத்திற்கு விமானம் மூலமாக வர வேண்டுமானால் கொல்கத்தா சர்வதேச விமான நிலையம் மூலமாக வரலாம். இது முர்ஷிடபாத்திலிருந்து 194 கி.மீ. தொலைவில் உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu