பில் காளேஷ்வர் கோயில் எனப்படும் இந்த புராதனமான கோயில் நதௌன் – சுஜன்பூர் சாலையில் அமைந்துள்ளது. 400 வருடங்கள் பழமையான இந்த கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மஹாபாரத பாண்டவ சகோதரர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது இக்கோயிலை கட்டியதாக நம்பிகை நிலவுகிறது. விஷ்வகர்மா எனும் படைப்புக்கடவுள் இக்கோயிலை கட்டுவதற்கு உதவியதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இக்கோயிலின் கட்டுமானப்பணிகள் இரவு நேரத்தில் நடந்ததாகவும் மக்களால் அடையாளம் காணப்பட்டதால் பாண்டவர்கள் கோயில் பணியை பாதியில் விட்டு விட்டு இடம்பெயர்ந்ததாகவும் காலம்காலமாக புராணிக நம்பிக்கை நிலவிவருகிறது. பின்னாளில் கடோச் வம்ச மன்னர்களால் இக்கோயில் முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் மே மற்றும் ஜூன் மாதத்தில் இக்கோயிலில் ஒரு சந்தைத்திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. நாட்டின் பல பகுதியிலிருந்தும் யாத்ரிகர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்பதற்கும், இக்கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை வழிபடுவதற்கும் வருகை தருகின்றனர்.
பியாஸ் ஆறும் குணாஹ் கத் ஆறும் கூடும் இடத்தில் அமைந்திருப்பதால் இந்த பில் காளேஷ்வர் கோயில் முக்கியத்துவம் வாய்ந்தை ஆன்மீகத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. ஹரித்வாருக்கு விஜயம் செய்ய முடியாத யாத்ரீகர்கள் இந்த கோயில் ஸ்தலத்தில் தங்கள் உறவினரின் அஸ்தியை கரைக்கின்றனர்.



Click it and Unblock the Notifications