நக்கர் நகரிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள நிஷாலா எனும் கிராமத்தில் உள்ள இந்த சாமுண்ட பகவதி கோயில் அதே பெயரைக்கொண்ட தெய்வத்துக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த பெண் தெய்வம் மாத்ரிகா எனப்படும் ஏழு பெண் தெய்வங்களில் ஒன்றாக வணங்கப்படுகிறது. 64 தந்த்ரீக பெண் தெய்வங்களை உள்ளடக்கிய யோகினிகள் எனப்படும் தெய்வங்களுக்கான தலைவியாகவும் இந்த தெய்வம் பூஜிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த யோகினிகள் பெண் ருத்ர அவதாரமாகிய துர்க்காவின் ஏவல் தெய்வங்கள் ஆவர். சண்டா மற்றும் முண்டா என்ற இரு அசுரகணங்களை கொன்றதால் இந்த கோயிலின் தெய்வத்துக்கு சாமுண்டா என்ற பெயர் வந்துள்ளது.
இந்த சாமுண்ட பகவதி கோயில் இயற்கை எழில் நிரம்பிய ஸ்தலத்தில் அமைந்திருப்பதால் இங்கு பல பிரபலமான பாலிவுட் ஹிந்தி படங்களின் காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications