நஞ்சன்கூடு நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்குள்ள முக்கிய அம்சமான நஞ்சுண்டேஸ்வர் கோயிலை தரிசிப்பது முக்கியமாகும். இது ஸ்ரீகண்டேஸ்வர் என்றும் அறியப்படுகிறது.
சிவபெருமானுக்கான கோயிலான இது திராவிட சிற்பக்கலை பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.புராணக்கதைகளின்படி யுகம் யுகமாக சிவபெருமான் இந்த திருத்தலத்தில் உறைவதாக நம்பப்படுகிறது.
கங்க மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் ஹொய்சள வம்சத்தினரால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்ற மன்னர்களும் இந்த கோயிலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர்.
திப்பு சுல்தானின் யானை ஒன்று நோய்வாய்ப்பட்டபோது இந்த நஞ்சன்கூடு ஸ்தலத்தில் பிராத்தித்ததன் மூலம் குணமடைந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.உள்ளூர் மக்கள் இன்றும் இந்த கோயில் தெய்வத்தின் பிணி தீர்க்கும் சக்தியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.நஞ்சுண்டேஸ்வர் கோயில் தேர்த்திருவிழாவின்போது பெருமளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
வருடத்தில் இரண்டு முறை நடத்தப்படும் இந்த தொட்ட ஜாத்ரே திருவிழாவின் போது கணபதி, பார்வதி தேவி, ஸ்ரீகண்டேஷ்வர், சுப்ரமண்யர், சண்டிகேஷ்வரர் ஆகிய கடவுளரின் சிலைகள் ஐந்து வெவ்வேறு தேர்களில் வைக்கப்பட்டு விசேஷ பூஜைக்குப்பின் ஊர்வலமாக எடுத்துவரப்படுகின்றன.



Click it and Unblock the Notifications