நர்கண்டாவில் மேற்கொள்ளப்படும் சாகச விளiயாட்டுகளில் மிகவும் பிரபலமானது மலையேற்றமாகும். ஹடூ சிகரத்திற்கும், நர்கண்டாவிற்கும் இடையிலுள்ள நன்கு இணைக்கப்பட்ட மலையேற்றப் பாதை சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பரிச்சயமான இடமாகும்.
சுற்றுலாப் பயணிகள் மலையேற்றம் செய்யும் பாதையானது பைன், ஓக், கொத்து கொத்தான மலர்களையுடைய பசுமை மாறா மரங்கள், தியோதர், சில் மற்றும் பிர் வகை தாவரங்களை கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்டும் இடங்களாக இருக்கும். சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுப்பதற்காக இந்த பகுதியில் பசும் புல்வெளிகள் நிறைந்த இடமான ஜோ பாக்-ஐ தேர்ந்தெடுக்கலாம்.



Click it and Unblock the Notifications