ஹக்கிம்பூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள இந்த குருத்வாரா நானக்சர் மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்களால் குரு ஹரி ராய் சாஹிப்ஜி அவர்களின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்டிருக்கிறது.
இந்த குருவானவர் ஹிரத்பூர் சாஹிப் குருத்வாரா ஸ்தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டபோது வழியில் இந்த இடத்தில் தங்கி ஓய்வெடுத்ததாக சொல்லப்படுகிறது. 2000 வீரர்கள் கொண்ட படையுடன் தனது பயணத்தை இந்த குரு மேற்கொண்டதாக உள்ளூர் கதைகள் கூறுகின்றன.
அச்சமயம் இக்குழுவினரின் குதிரைகளை கட்டிவைப்பதற்கு பயன்பட்ட பீபல் மற்றும் வேப்ப மரங்கள் இன்றும் இந்த குருத்வாரா ஸ்தலத்தில் வீற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், குரு தேஜ் பஹதூர் அவர்கள் ஷீ அனந்தபூர் சாஹிப் ஸ்தலத்திற்கு செல்லும் வழியில் இந்த நானக்சர் குருத்வாராவில் தங்கி ஓய்வெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. பங்கா-ஹகிம்புரா-பக்வாரா சாலையில் பாஹிராம் ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் இந்த குருத்வாரா நானக்சர் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications