ஷிவாலா பன்னா மால் எனப்படும் இந்த வரலாற்று மாளிகை வளாகம் கபுர்தலா மஹாராஜாவின் அவையில் முதலமைச்சராக இருந்த திவான் பன்னா மால் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.
நவான்ஷாஹர் நகரத்தின் மையப்பகுதியிலேயே வீற்றிருக்கும் இது இந்த நகரத்துக்கு இணையான பழமையை கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. இந்த திவான் பன்னா மால் யானை மீது மட்டுமே சவாரி செய்யும் வழக்கம் உடையவராக இருந்ததால் இந்த மாளிகையின் வாயில் அமைப்புகள் பிரம்மாண்டமாகவும் உயரமாகவும் அமைக்கப்பட்டு காட்சியளிக்கின்றன.
இதன் உள்ளே இலவச உணவு மற்றும் இலவச மருந்து ஆகியவற்றை அளிக்கும் கோயில் மற்றும் மருத்துவமனை போன்றவை அமைந்துள்ளன.
தற்போது திவான் பன்னா மால் அவர்களின் வாரிசுகள் என்று யாருமேயில்லை. எனவே ஷிவாலா பன்னா மால் கமிட்டி எனும் அறங்காவலர் குழு ஒன்று இந்த புராதன மாளிகை வளாகத்தை நிர்வகித்து வருகிறது.



Click it and Unblock the Notifications