Search
  • Follow NativePlanet
Share
» »அமெரிக்காவில் பிரமாண்டமாக திறக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் சிலை – ஜெய்பீம் கோஷமிட்டு மக்கள் உற்சாகம்!

அமெரிக்காவில் பிரமாண்டமாக திறக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் சிலை – ஜெய்பீம் கோஷமிட்டு மக்கள் உற்சாகம்!

இந்திய அரசியலமைப்பின் முதன்மை சிற்பியான டாக்டர் B.R.அம்பேத்கரின் மிக உயரமான சிலை அமெரிக்காவின் மேரிலாந்தின் புறநகர் பகுதியில் முறையாக திறந்து வைக்கப்பட்டது. "சமத்துவத்தின் சிலை" என்று குறிப்பிடப்படும் இந்த சிலை அக்டோபர் 14 அன்று பல்வேறு முக்கியஸ்தர்கள் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டது. திறப்புவிழாவில் 'ஜெய்பீம்' கோஷமிட்டு மக்கள் உற்சாகமடைந்தனர்!

அமெரிக்காவில் திறக்கப்பட்ட அம்பேத்கர் சிலை

இந்தியாவிற்கு வெளியே டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் மிக உயரமான சிலை அக்டோபர் 14 அன்று அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் திறக்கப்பட்டது. அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் முதன்மை சிற்பி மற்றும் இந்தியாவில் தலித் சமூகத்திற்கு சம உரிமைகளை வாதிடுவதில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

19feetstatueofdr-b-r-ambedkar

இந்திய அரசியலமைப்பின் சிற்பி

ஏப்ரல் 14, 1891 இல் பிறந்த டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் - பாபாசாஹேப் என்று அவரைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் பிரபலமானவர் - அரசியலமைப்புச் சபையின் மிக முக்கியமான வரைவுக் குழுவின் தலைவராக இருந்தார், இந்திய அரசியலமைப்பை உருவாக்கியதால் அவருக்கு இந்திய அரசியலமைப்பின் சிற்பி என்ற பெயர் வந்தது.

அமெரிக்காவில் அம்பேத்கருக்கு 19 அடி சிலை

"சமத்துவத்தின் சிலை" என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த 19 அடி சிலை திறக்கும் விழாவில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் மற்றும் இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். கனமழை மற்றும் தூறல் ஆகியவை பங்கேற்பாளர்களின் உற்சாகத்தையும் ஆற்றலையும் தடுக்கவில்லை, அனைவரும் ஜெய்பீம் என கோஷமிட்டு உற்சாகமடைந்தனர்.

ராம் சுதாரால் செய்யப்பட்ட சிலை

குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணைக்கு கீழே உள்ள நர்மதா தீவில் நிறுவப்பட்ட ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படும் சர்தார் படேல் சிலையின் பணிக்காக அறியப்பட்ட கலைஞர் ராம் சுதாரால் இந்த சிலை செதுக்கப்பட்டுள்ளது.

பலருக்கும் ஊக்கமளிக்கும் அடையாளம்

அமெரிக்காவில் அம்பேத்கரிய இயக்கத்தை வழிநடத்தும் தீலிப் மாஸ்கே, "சமத்துவத்தின் சிலை" 1.4 பில்லியன் இந்தியர்களையும் 4.5 மில்லியன் இந்திய அமெரிக்கர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று வலியுறுத்தினார். இந்திய-அமெரிக்கர்கள் மட்டுமின்றி, ஆப்ரிக்கர்கள், ஹிஸ்பானியர்கள் மற்றும் பிற சமூகத்தினருக்கும் இந்தச் சிலை ஒரு ஊக்கமளிக்கும் அடையாளமாக பார்க்கின்றனர்.

வாழ்த்திய இந்தியத் தலைவர்கள்

இது முழுவதுமாக சமூகத்தின் பங்களிப்பு மூலம் செய்யப்பட்டாலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோரிடமிருந்து 'அம்பேத்கரியம் ஐக்கிய இந்தியாவிற்கு அமெரிக்காவிலும் உலக அளவிலும் அடித்தளம் அமைத்துள்ளது' என்று வாழ்த்துச் செய்திகளைப் பெற்றார்கள்.

அமெரிக்காவில் கொண்டாடப்படும் தம்ம சக்ர பரிவர்த்தன் தினம்

சுதந்திரத்திற்குப் பிறகு, டாக்டர் அம்பேத்கர் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதி அமைச்சராகவும் பணியாற்றினார். தலித்துகள் மற்றும் தீண்டத்தகாதவர்களின் உரிமைகளுக்காக வாதிடும் சமூக இயக்கங்களில் அவர் முக்கிய பங்கு வகித்தார். மேரிலாந்தில் சிலை திறப்பு விழாவுடன், அக்டோபர் 14 அன்று புத்த மதத்தைத் தழுவிய சில மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 6, 1956 அன்று அவர் காலமானார். அக்டோபர் 14 ஆம் தேதி அம்பேத்கரியர்களால் தம்ம சக்ர பரிவர்த்தன் தினமாக கொண்டாடப்படுகிறது.

75 ஆண்டுகளுக்குப் பிறகும் புரிந்து கொள்ளும் மக்கள்

அமெரிக்காவில் உள்ள பாபாசாகேப்பின் மிக உயரமான சிலை இதுவாகும். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய பணிகளை மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள், அதனால்தான் அவர் நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகிறார், இப்போது மக்கள் அவரை சரியான முறையில் புரிந்து கொண்டுள்ளனர் என்று நம்மால் உணர முடிகிறது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+