Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையில் பெண்களுக்காக பிரத்யேகமாக களமிறங்கும் ‘பிங்க் ஆட்டோக்கள்’ – அதன் ஸ்பெஷல் என்ன?

சென்னையில் பெண்களுக்காக பிரத்யேகமாக களமிறங்கும் ‘பிங்க் ஆட்டோக்கள்’ – அதன் ஸ்பெஷல் என்ன?

தமிழக அரசு, பெண்கள் நலன், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்திற்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு என பிரத்யேக பிங்க் ஆட்டோக்கள்

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக சென்னையில் பெண்களால் இயக்கப்படும் 'பிங்க் ஆட்டோரிக்ஷா'க்களுக்கு மாநில அரசு ஓரளவு நிதியளிக்கும். சென்னையில் வசிக்கும் 250 பெண்களுக்கு சிஎன்ஜி/ஹைப்ரிட் ஆட்டோரிக்ஷாக்களை வாங்குவதற்கு தலா ரூ.1 லட்சம் மானியமாக அரசு வழங்கும். வாகனம் வாங்க தேவையான மீதமுள்ள தொகைக்கு கடன் வழங்கப்படும்.

பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்நாடு

தமிழக அரசு பெண்கள் நலன், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறது. ஏற்கெனவே பெண்களின் நலனை உறுதி செய்யும் பொருட்டு இலவச பேருந்து பயணம், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை திட்ட, பிற ஊர் பெண்கள் சென்னையில் பாதுகாப்பாக தங்கி பணியாற்ற தோழி விடுதி ஆகிய திட்டங்களை தமிழக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. பெண்களின் பாதுகாப்பில் தமிழகம் சிறந்து விளங்கும் நிலையில் அதை மேலும் வலுப்படுத்தும் வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஒரு புதிய முன்னெடுப்பாக இளஞ்சிவப்பு ஆட்டோக்களை அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

250pinkautos operated

பிங்க் ஆட்டோ திட்டத்தின் விவரங்கள் என்ன?

1. இத்திட்டத்திற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

2. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

3. பெண்ணின் வயது 25 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

4. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்

5. ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்

6. சென்னையில் குடியிருக்கும் நபராக இருப்பது அவசியம்

250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் மானியம்

இத்திட்டத்திற்கென சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழக அரசு CNG/Hybrid ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்கு வங்கிகளுடன் தொடர்பு அளிக்கப்படும். சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலருக்கு, 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை - 600 001 என்ற முகவரிக்கு 23 .11.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு இருக்கும் முக்கிய திட்டங்கள்

அவற்றோடு, பெண்களின் நலனை உறுதி செய்யும் விதமாக விடியல் பயணத்திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியது. புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு புதிய மகளிர் நலத் திட்டங்களை செயல்படுத்தி, பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளது.

இந்த முன்முயற்சி நகர்ப்புற இயக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குதல், அத்துடன் தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாப்பை மேம்படுத்துதல் போன்ற பரந்த இலக்குகளுடன் இணைந்துள்ளது. இது உண்மையிலேயே மிகவும் பாராட்டுக்குரியது!

More News

    Read more about: chennai news tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+