• Follow NativePlanet
Share
» »கங்கை நதியைச் சுற்றி வரவிருக்கும் 75 சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்கள் – சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே!

கங்கை நதியைச் சுற்றி வரவிருக்கும் 75 சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்கள் – சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே!

கங்கை நதிக்கரையில் புதிதாக 75 இடங்கள் இந்த ஆண்டு நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா மையங்களாக உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலா பெருகும் இப்பகுதியில் வாழ்வாதாரம் அதிகரிக்கும், மேலும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நெட்வொர்க்குகளைக் கொண்ட நதிப் படுகையை பொருளாதார மையமாக மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதனால் கங்கை நதியைச் சுற்றி சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் தொடங்கி வைத்த அர்த்த கங்கா கான்செப்ட்

பிரதமர் தொடங்கி வைத்த அர்த்த கங்கா கான்செப்ட்

2019 ஆம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற தேசிய கங்கா கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட "அர்த்த கங்கா கான்செப்ட்"
இன் ஒரு பகுதியே இந்த முயற்சி என்று NMCG இன் இயக்குநர் ஜெனரல் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

கங்கை நதிக்கரையில் உள்ள சுமார் 75 தளங்கள் நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா மையங்களாக உருவாக்கப்பட்டு கங்கையை சுற்றி சுற்றுலாவை மேம்படுத்துவதோடு அதனை தூய்மையாக பராமரிப்பதும் இதன் தலையாய நோக்கமாகும்.

ஏற்கனவே இருக்கின்ற சுற்றுச்சூழல் ஸ்பாட்டுகள்

ஏற்கனவே இருக்கின்ற சுற்றுச்சூழல் ஸ்பாட்டுகள்

மத்திய நீர்வளம் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ஆறு மாநிலங்களில் அதாவது உத்தரகாண்ட், பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கோமதி, கங்கா, சம்பல், யமுனா மற்றும் ஹூக்லி ஆகிய ஆறுகளில் சுமார் 26 இடங்களில் ஆகஸ்ட் 16 அன்று இந்த முயற்சியைத் தொடங்கினார்.

இவற்றில் உத்தரபிரதேசத்தில் 11 இடங்களும் உள்ளன, ஆறு தளங்கள் மேற்கு வங்காளத்தில் 6 இடங்களும், பீகாரில் 5 இடங்களும், உத்தராகண்ட்டில் 2 இடங்களும், மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்டில் தலா ஒரு இடமும் அடங்கியுள்ளன.

உள்ளூர் மக்களின் பங்களிப்பு

உள்ளூர் மக்களின் பங்களிப்பு

இந்த முன்முயற்சிக்காக, ஒவ்வொரு தளத்திற்கும் குறிப்பிட்ட நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் இயற்கை வளங்களின் இருப்பு மற்றும் உள்ளூர் நிலைமைகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டுள்ளன.

கங்கை நதி மற்றும் அதன் துணை நதிகளின் புத்துயிர் பெறுவதை உறுதி செய்வதால், உள்ளூர் மக்களின் பங்கேற்பு திட்டத்தின் இன்றியமையாத பகுதியாகும்.ஜலஜ், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சுத்தமான நதி சுற்றுச்சூழல் அமைப்பிற்கான உள்ளூர் ஆதரவை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு துணைத் திட்டமாகும்.

நிலையான வாழ்வாதார நடைமுறைகளில் பயிற்சி பெற்ற உள்ளூர் சமூகத்தின் வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. மேலும் சுற்றுச்சூழலுக்கு மேலும் தீங்கு விளைவிக்காமல், எவ்வாறு பொறுப்புடன் பயணிப்பது என்பதே சுற்றுச்சூழல் சுற்றுலா ஆகும். ஆதலால் கங்கையை சுற்றி இனி பல சுற்றுச்சூழல் மையங்களை நாம் காணலாம்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+